SuperTopAds

பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு கல்முனையில் ஆசந்தி பேரணி நிகழ்வு

ஆசிரியர் - Editor III
பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு கல்முனையில் ஆசந்தி பேரணி நிகழ்வு

கிறிஸ்தவ மக்களால்  உலகளாவிய ரீதியில்  பெரிய வெள்ளி தினம்(29)  அனுஷ்டிக்ப்படுகிறது.இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவையில் அறையைப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தினை அனைத்து கிறித்தவ மக்களும் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று அழைத்து நினைவுகூருகின்றனர். புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என இந்த நாளை கிறித்தவ மக்கள் அழைக்கின்றனர்.

இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்றில் இருந்து மூன்றாம் நாள் இயேஜசு உயிர்த்தெழுந்த நாளினை உயிர்த்த ஞாயிறு என்றும் கிறித்தவ மக்கள் அழைத்து அதனை கொண்டாடுகின்றனர்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இன்றைய நாளில் உலகலாளி ரீதயில் உள்ள தேவாலையங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில்   நாட்டிலுள்ள தேவாலையங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.கிறித்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளான பெரிய வெள்ளி  இயேசு கிறிஸ்து உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படும் நிகழ்வாகும்.

இதற்கமைய இன்றைய தினம் வடக்கு  கிழக்கு மற்றும் மலையகம் உட்பட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை திரு இருதயநாதர்   தேவாலயத்தின் பெரிய வெள்ளி    இன்று மாலை ஆசந்தி பேரணி நிகழ்வு     இடம்பெற்றது.

இப்பேரணியானது  தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி   பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.இந்த பேரணியில்  அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக   வழிபாடுகளில்   பங்கு கொண்டிருந்ததுடன்  பொலிசார்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில்  இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.