திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு உடனிருந்து உற்சாகமளித்த அமைச்சர் டக்ளஸ்!

ஆசிரியர் - Admin
திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு உடனிருந்து உற்சாகமளித்த அமைச்சர் டக்ளஸ்!

திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்து உற்சாகமளித்துள்ளார்.

முன்பதாக யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

எனினும் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.


அதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரம் தாடியாலும், 500 மீற்றர் தூரத்தை தனது தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த உலக சாதனையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வம் அவர்களின் சாதனையை அங்கீகரித்து பதக்கத்தையும், விருதையும்,   பட்டயத்தையும் வழங்கியிருந்ததுடன் குறித்த பரிசில்களை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு