கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் அந்த விஷயத்தை செய்த அமலா பால்..

ஆசிரியர் - Editor I
கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் அந்த விஷயத்தை செய்த அமலா பால்..

நடிகை அமலா பால் கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது இவருடைய இரண்டாம் திருமணம் ஆகும்.

ஏற்கனவே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன்பின் கடந்த ஆண்டு காதலரை கரம்பிடித்தார்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துகொண்டுள்ளார். ஆம், அமலா பால் நடிப்பில் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம்.

பிளஸ்ஸி இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 

பிரித்விராஜ் இயக்குனர் பிளஸ்ஸி மட்டுமே இதுவரையிலான ப்ரோமோஷனில் கலந்துகொண்டனர்.ஆனால், தன்னுடைய ஆடு ஜீவிதம் படத்திற்காக ப்ரோமோஷன் செய்யவேண்டும் என 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்திலும், 

பிரித்விராஜ் உடன் இணைந்து ப்ரோமோஷன் வேளையில் இறங்கியுள்ளார் அமலா பால். இதற்காக அமலா பாலுக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு