வடமாகாணத்தில் மட்டும் வெளிநாட்டு ஆசைகாட்டி 254 கோடி ரூபாய் மோசடி!! வவனியாவில் 116 கோடி, யாழ்ப்பாணத்தில் 56 கோடி...
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்னர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மற்றும் காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் 51 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 46 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 116 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 33 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் விழிப்படையும் போதே , இவ்வாறான மோசடியான நபர்களிடம் இருந்து தமது பணத்தினை பாதுகாத்து கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.