SuperTopAds

புதுக்குடிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியும் இளைஞனும் கைது!

ஆசிரியர் - Editor I
புதுக்குடிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியும் இளைஞனும் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில்  கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, இவர்களிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன்ட் மேஜரையும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் நிறுத்தியபோது இருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது 

இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை, சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.