தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் சிவராத்திரி வழிபாடு...

ஆசிரியர் - Editor I
தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் சிவராத்திரி வழிபாடு...

வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் 5 கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். 

மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை (07) இரவு நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

அரச காட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதைக்கு பொலிஸ் வீதித்தடை போடப்பட்டு.அந்த பகுதிக்குள் வசிப்பவர்கள் மாத்திரம் பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்

.இதேவேளை மகா சிவராத்திரி வழிபாட்டிற்காக தூர இடங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள், உள்ளே செல்லமுடியாதவாறு பிரதான வீதியில் தரித்தி நின்றனர்.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராசா கயேந்திரன், வேலன் சுவாமிகள், ரவிகரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர் சென்றனர். 

அவர்களது வழிகாட்டலுடன் காலை 10 மணியளவில் பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் ஒலுமடு பிரதான வீதியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரம் காட்டுப்பாதையூடாக நடந்துசென்று பொதுமக்கள் ஆலயத்தினை அடைந்தனர்.


இதேவேளை குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விகாரைகளில் இருந்து பௌத்த மதகுருக்களும் சிங்கள மக்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு