சாந்தனின் புகழுடலுக்கு வவுனியா - முல்லைத்தீவு - கிளிநொச்சியில் கண்ணீர்மல்க மக்கள் அஞ்சலி...

ஆசிரியர் - Editor I
சாந்தனின் புகழுடலுக்கு வவுனியா - முல்லைத்தீவு - கிளிநொச்சியில் கண்ணீர்மல்க மக்கள் அஞ்சலி...

கிளிநொச்சியில்

ஏ9 வீதியில் மக்கள் ஊர்வலமாக சாந்தனின் உடல் ஊர்தியில் அஞ்சலி மண்டபம் வரை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அஞ்சலிக்காக உடல் டிப்போ சந்தியில் அமைக்கப்பட்ட அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.


முல்லைத்தீவு - மாங்குளத்தில்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி விடுதலையாகி திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் உடல், 

சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு முல்லைத்தீவு - மாங்குளம் சந்திப் பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில்

மறைந்த சாந்தனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு, வவுனியாவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் (01) எடுத்து வரப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. 

பிரேத பரிசோதனை முடிவின் பின்னர், இன்று (03) காலை அவரது உடல் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக 

இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சாந்தனின் உடலானது மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு