கடைக்குள் புகுந்து பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கும்பல்!

ஆசிரியர் - Editor I
கடைக்குள் புகுந்து பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கும்பல்!

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் உள்ள கடையொன்றுக்குச் சென்ற இருவர் கடை உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் கடைக்குள் நுழைந்து பீடி தருமாறு பெண்ணிடம் கேட்க, அவர் அதை எடுக்க முற்பட்டபோதே, அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு