5 நாட்களில் 24 கோடி வசூலித்த ரஜினியின் லால் சலாம்

ஆசிரியர் - Editor II
5 நாட்களில் 24 கோடி வசூலித்த ரஜினியின் லால் சலாம்

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார்ராக வலம்வரும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.

ரஜினி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் தான் லால் சலாம். ரஜினியின் மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 24 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு