மாணவனின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பிய விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர் கைது!
பாடசாலை மாணவர் ஒருவரின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து மாணவரை பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுத்த முயன்ற விஞ்ஞான பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எல்பிலிபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய விஞ்ஞான பிரிவு ஆசிரிய ஆலோசகராவார்.
இவர் இரத்தினபுரி - கொலன்ன பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து மாணவரின் ஆபாச படங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
குறித்த மாணவன் இது தொடர்பில் ஊழல் தடுப்பு பிரிவின் இரத்தினபுரி மாவட்ட அதிகாரி ஒருவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் அந்த அதிகாரி இது தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் எல்பிலிபிட்டி பொலிஸார் மற்றும் கொலன்ன சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எல்பிலிபிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலன்ன சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.