SuperTopAds

பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் குறித்து முறைப்பாடு வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்...

ஆசிரியர் - Editor I
பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் குறித்து முறைப்பாடு வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்...

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் 'யுக்திய' வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை பொலிஸை மையப்படுத்தி நடைபெற்றது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இது இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

"பெண்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் இந்த வழக்குகளில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் 100,000 க்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. 

எனவே அவர்கள் அனைவரையும் மனதில் வைத்து நாங்கள் நேற்று இந்த மசோதாவைக் கொண்டு வந்தோம். பெண்களுக்கே தெரியும் பஸ்ஸில் செல்ல முடியாத நிலை உள்ளது. யாரேனும் தொந்தரவு செய்தால், 

109 க்கு அழைக்கவும். புகார் அளித்தால், 48 மணி நேரத்தில் பிரச்னைக்கு தீர்வு காண்போம்,'' என்றார்.