SuperTopAds

ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தின் பி.பி.எல் கிரிக்கற் திருவிழா அங்குரார்ப்பண நிகழ்வு(photoes)

ஆசிரியர் - Editor III
ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தின் பி.பி.எல் கிரிக்கற் திருவிழா அங்குரார்ப்பண நிகழ்வு(photoes)

ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தின் பி.பி.எல் கிரிக்கற் திருவிழா அங்குரார்ப்பண நிகழ்வு(photoes)

பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் பெரியகல்லாற்றில் முதற் தடவையாக நடாத்தும் பி.பி.எல் கிரிக்கற் திருவிழாவிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை (20) பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்pல் ஆர்.கோபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது

பிரதம விருந்தினராக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும் அதிவிசேட அதிதியாக மட் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரனும் கலந்து கொண்டனர.;

ஆன்மிக அதிதிகளாக கிராமத்திலுள்ள தேவாலயங்களின் சமய குருமார்களான சிவஸ்ரீ டுனாஸ் காந்தக் குருக்கள் அருட்பணிஅன்ரன் லோரன்ஸ் ராகல் அருள்திரு எஸ் திருமறைதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்;

விசேட அதிதிகளாக தமிழ் மக்கள் கட்சி தேசிய அமைப்பாளர் ரி.சஜீவரன் பிரதேச சபை செயலாளர் எஸ்.அறிவழகன் தடம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் முதன்மை அனுசரணையாளருமான ஆர் நிறஞ்சன் ஆகியோருடன் சிறப்பு அதிதிகளாக பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் என்.கமல்ராஜ் பிரதேச வைத்திய அதிகாரி ஞா.சஞ்ஜய் உட்பட பல உள்ளுர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். .கௌரவ அதிதிகளாக அணிகளின் உரிமையாளர்களும் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்களும், அழைப்பு அதிதிகளாக பெலிஸ்அதிகாரிகள் உட்பட இன்னும்பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

பருவ மழை அவ்வப்போது தலை காட்டியபோதும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி தடங்கலேதுமின்றி சிறப்பாக நடைபெற்றது. பி.பி.எல்; என்ற புதிய அனுபத்தை இந்தக் கிராமத்தின் கிரிக்கற் விளையாட்டு வீரர்களுக்கு; ஏற்படுத்தவதற்கு ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தினர் காலநிலை சவால் விட்டபோதும் சாதித்துக் காட்டியுள்ளனர்.

இந் நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்; அரசாங்க அதிபர் உட்பட அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக ; மங்கல விளக்கேற்றி வைப்பதையும் மழை தூறலையும் பொருட்படுத்தாது வரவேற்பு நடன தாரகைகள் தங்கள் நடனத்தால் அதிதிகளை வெகுவாகக் கவர்ந்தனர்.; அதிதிகளுக்கு அணி வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்படுவதையும் பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்படுவதையும். அணிகளின் பொறுப்பாளர்கள் நால்வரும் அதிதிகளுடன் காணப்படுவதையும் அணிகளின் வீரர்களையும் படங்களில் காணலாம்

கல்லாறு றோயல்லயன்ஸ் அணி, பொட்டு ரப்டர்ஸ் அணி கல்லாறு வங்காள கிங்ஸ் அணி, அரிஓனா வோரியஸ் என்பன இந்த கிரிக்ற் திருவிழாவில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.