போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு 07 நாள் வதிவிடத்துடன் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் திட்டம்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு 07 நாள் வதிவிடத்துடன் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் திட்டம்
சட்டத்தை மாத்திரம் அமுல்படுத்துவதனூடாக இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வைக் காணமுடியாது என்ற காரணத்தினால் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குபுனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் திட்டமொன்று அம்பாரை மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'யுக்திய''விற்கான சக்தி என்ற தொணிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் மனிதநேயசெயற்பாடானது அம்பாரை மஹாவாபி விகாரை மற்றும் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுஅரங்கு ஆகிய இடங்களில் 2024.01.22 முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு வதிவிட நிகழ்வாகநடாத்தப்படவுள்ளது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் கல்வி நிறுவனங்கள் சுகாதார சேவை மற்றும் கலாச்சார விளையாட்டுப் பிரிவுகளை தொடர்புபடுத்திசெயற்படுத்தப்படும் இச்செயற்பாட்டிற்கு போதைப்பொருளுக்கு அடிமையான அம்பாரைமாவட்டத்தைச் சேர்ந்த 150 நபர்கள் உட்படுத்தப்படவுள்ளார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் சகலருக்கும் காலை 5 மணிக்கு வழங்கப்படும் இலைக்கஞ்சியில் இருந்து சகல உயர்தர உணவுகளும் அம்பாரை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ்அத்தியட்சகர் ஜே. எச். எம். என் ஜயபத்மவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிகாட்டலுக்கு அமையஇந்நிகழ்ச்சியை அம்பாரை பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தமயந்தவிஜய ஸ்ரீ மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்குமாகாண இணைப்பாளர் எம். எம். ஜி. பி. எம். றஸாட் ஆகியோரால் வழிநடாத்தப்படுகிறது.மேலும் இந்நிகழ்வின் பங்காள அமைப்பான GAFSO நிறுவனத்தின் திட்ட பணிப்பாளரும் உபதேச குழுவின் தவிசாளருமான அ.ஜ. காமில் இம்டாட் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கைத் திருநாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை போதைப்பொருள் அழித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை மூலம் ஒரு மாத காலத்திற்குள் போதைப்பொருள் வலைப்பின்னலை பாராட்டத்தக்க அளவு கட்டுப்படுத்த இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு முடிந்துள்ளது.
மனிதர்கள் பிறப்பிலேயே குற்றவாளிகள் அல்ல குடும்பங்களை முதன்மையாகக் கொண்டசமூகத்தில் முறையாக வழிநடாத்தப்படாத காரணத்தால் வழிகேட்டில் சென்ற இளைஞர்களைசட்டத்தை அமுல்படுத்துவதனூடாக மாத்திரம் நல்வழிப்படுத்த முடியாது.
அதன் காரணமாக சங்கீதம் இயற்கை இரசனை வாழ்க்கைத்திறன் நிதி முகாமைத்துவம மற்றும் ஆன்மீக நம்பிக்கைபோன்ற பல முறைகள் கையாளப்பட்டு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குபுனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் நட்பு ரீதியான இவ்வேலைத்திட்டம் இளைஞர்களைநல்வழிப்படுத்தி சமூகமயப்படுத்த செயற்படுத்தப்படுகிறது.
பாதிப்பினை ஏற்படுத்தும் பிழையான செயற்பாடுகளால் வாழ்க்கையை தொலைத்தஇளைஞர்களுக்கு சரியான பாதையினைக் காட்டி நல்ல மனிதர்களாக அவர்களை சமூகமயப்படுத்த எடுக்கும் இந்நடவடிக்கைக்காக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.