உரிமைகளை வென்றெடுக்க ஒன்றாய் பயணிப்போம் - தமிழரசு கட்சி தலைவர் சி.சிறீதரன்...

ஆசிரியர் - Editor I
உரிமைகளை வென்றெடுக்க ஒன்றாய் பயணிப்போம் - தமிழரசு கட்சி தலைவர் சி.சிறீதரன்...

தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் தமது பங்கென்பது தமிழ்தேசிய இனம், இனத்தினுடைய இருப்பு, தமிழ்த்தேசிய இனத்திற்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது எனக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதியதலைவரான சிவஞானம் சிறீதரன், தமிழ்த்தேசிய உரிமைகளை வென்றெடுப்பதற்காக எல்லோரும் இணைந்து செயலாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தலைவர் தெரிவில் வெற்றியீட்டியபின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் ஜனநாயகரீதியிலின உரையாடல் ஊடாகவும், ஜநாயகரீதியிலான செயன்முறைக்கூடாகவும் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தைப் பதித்திருக்கிறோம்.

இது பலபேருக்குப் பல நம்பிக்கைகளைத் தந்திருக்கிறது.

பல இளைஞர், யுவதிகளுக்குக்கூட கட்சிபற்றிய அதீதஅக்கறை கொள்ளவைத்திருக்கின்றது.

நானும், சக போட்டியாளர்களான நண்பர் சுமந்திரனும், யோகேஸ்வரன் எல்லோரும் இணைந்து கட்சியினுடைய செயற்பாடுகளை இன்னும் பலவழிகளில் தமிழ் தேசிய இருப்பிற்காக பொறுப்போடும், கடமைஉணர்வோடும் முன்னெடுத்துச்செல்வோம்.

ஆகவே எங்களுடைய பங்கு என்பது இனம்சார்ந்தது, தமிழ்த்தேசிய இனத்தினுடைய இருப்பு சார்ந்தது, எமது இனத்திற்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது.

அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் எல்லோரும் எமது கரங்களை ஒன்றாகப் பலப்படுத்துவோம்.

எமது பொதுச்சபை உறுப்பினர்களது அயராத உழைப்பும், புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிவுமிருக்கின்ற ஒவ்வொரு தமிழர்களுடைய மன எண்ணங்கள், இறை நம்பிக்கைகள், அவர்களிடமிருந்த எண்ணங்கள் எல்லாமே எனக்கானதொரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கின்றது.

அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாக நானும், எல்லோரும் இணைந்து முன்னெடுத்துச்செல்வோம். அதற்கான வாய்ப்பை நல்கிய அனைவருக்கும் நன்றிகள் - என்றார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு