கிளிநொச்சியில் ஹெரோயினுடன் கைதானவருக்கு ஆயுள் தண்டணை விதித்தது கிளிநொச்சி மேல் நீதிமன்றம்...

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் ஹெரோயினுடன் கைதானவருக்கு ஆயுள் தண்டணை விதித்தது கிளிநொச்சி மேல் நீதிமன்றம்...

கிளிநொச்சி போராலை என்ற இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு 143 கிறாம் கெரோயினுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. 

கிளிநொச்சி பேராலை என்ற இடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 143 கிறாம் கெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு

அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு 

நேற்றைய (18-01-2024) தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பகல் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி குறித்த எதிரியானவர் இதற்கு முன்னர் குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் 

அவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றுள்ளவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் காணப்படுகின்றார் எனவும் 

தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை செய்து இருந்தார்.

இதே நேரம் சட்டமா அதிபர் திணைக் களத்தின் சார்பாக ஆஜரான சட்ட வாதி தண்டனையானது ஒரு முன்னோடியான தண்டனையாக இருக்க வேண்டும் 

குற்றவாளிக்கான தண்டனையானது ஒரு தனிநபருக்கான தண்டனையாக கருதவது அல்லாது ஒரு எதிர்கால இளம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு விடயமாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை செவிமடுத்த மன்று குற்றவாளிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு