தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு! - இன்றைய பேச்சு தோல்வி.

ஆசிரியர் - Editor IV
தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு! - இன்றைய பேச்சு தோல்வி.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை ஒருமனதாக நடத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை.

இதனால் திட்டமிட்டபடி எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயக முறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு