அயலான் அதிகாலை காட்சிக்கு அனுமதி உண்டா?
பல வருடங்களாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம் தான் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி வந்த அயலான் படம் சில காரணங்களினால் படப்பிடிப்பு தாமதமானது. ஒரு வழியாக இந்த பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கிறது.
அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை ஜனவரி 12ஆம் தேதி அயலான் படம் ரிலீஸ் ஆகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் அயலான் படத்திற்கு தயாரிப்பு நிறுவனமான கேஜிஆர் ஸ்டுடியோஸ் தமிழ்நாடு அரசு இடம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு இருந்தனர்.
சமீபகாலமாக 11 மணி காட்சி தான் முதல் காட்சியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அயலான் படக்குழு கேட்ட கோரிக்கையை ஏற்று 9 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. மேலும் தினசரி அயலான் படம் 5 காட்சிகள் திரையிடலாம் என்றும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கேஜிஆர் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளது. அதாவது அதிகாலை காட்சிக்கு தமிழ்நாடு அனுமதி வழங்கி உள்ளது, அதற்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டிருந்தனர். இந்த பதிவு தான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் இந்த பதிவை இப்போது கேஜிஆர் நிறுவனம் நீக்கிவிட்டது. மேலும் சமூக வலைதளங்களில் அந்த ட்வீட் பரவிய நிலையில் இப்போது அயலான் படக்குழுவை ரசிகர்கள் கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். அயலான் படத்திற்கு போட்டியாக இந்த பொங்கலுக்கு கேப்டன் மில்லரும் வெளியாக உள்ளதால் பொங்கல் ரேஸில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.