பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை!

ஆசிரியர் - Editor IV
பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை!

பொதுவாக “தைராய்டு” என்பது கழுத்தின் முன்பகுதியில், தொண்டையின் நடுப்பகுதிக்கு சற்று கீழே அமைந்துள்ள முக்கிய நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை சிறப்பாக வைத்து கொள்ளும் வேலையை இந்த தைராய்டு ஹார்மோன் செய்கின்றது.

பொதுவாக “தைராய்டு” என்பது கழுத்தின் முன்பகுதியில், தொண்டையின் நடுப்பகுதிக்கு சற்று கீழே அமைந்துள்ள முக்கிய நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை சிறப்பாக வைத்து கொள்ளும் வேலையை இந்த தைராய்டு ஹார்மோன் செய்கின்றது.     

அத்துடன் சுவாசம், இதய துடிப்பு, செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை பாதிக்கும் ஹார்மோன்களையும் உருவாக்குகிறது. தைராய்டு சுரப்பியானது தன்னுடைய வேலையை சரியாக செய்யாவிட்டால் எரிச்சல், சோர்வு, எடையில் திடீர் மாற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாவிட்டால் ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம், goitre மற்றும் தைராய்டு நோட்யூல்ஸ் ( thyroid nodules) ஆகிய நிலைகளில் ஆபத்துக்கள் ஏற்படும்.

தைராய்டு ஹார்மோன்களை சரியாக உற்பத்தி செய்யவில்லை என்றால் “ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) ” என்ற நிலை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினை நிலையானது, இதனால் பெண்கள்- கர்ப்பம், முதுமை, நீரிழிவு நோய், இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருந்துகள் எடுப்பது அவசியம்.

இப்படி இல்லாவிட்டால் தைராய்டு சுரப்பியை அகற்றி ஆப்ரேஷன் செய்து கொள்ளலாம்.

மேலும் கதிர்வீச்சு சிகிச்சை பெறலாம் ஆனால் இதிலிருந்து வரும் கதிர்கள் காரணமாக ஹார்மோன்ஸ் சமநிலையின்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

உடலின் தைராய்டு சுரப்பியானது அதிகமாக செயல்பட்டு வருவதால் “ஹைப்பர் தைராய்டிசம்” நிலை ஏற்படுகின்றது. இதனையே Graves நோய் என அழைக்கிறார்கள். இது ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பை தாக்கும்.

அறிகுறிகள்

1. உடல் எடை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவற்றை அவதானிக்கலாம்.

2. அடிக்கடி கவலை, சோகம் ஏற்படும். அல்லது மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.

3. அதிகமான தூக்க அல்லது மந்த உணர்வு மற்றும் தூக்கத்தில் தொந்தரவு இருக்கும்.

4. முடி உதிர்வு அல்லது வறண்ட சருமம் தோன்றல்.

5. மூட்டுகளில் அசௌகரியம் மற்றும் தசை பலவீனமாதல்

6. இதயம் திடீரென வேகமாக அல்லது மெதுவாக துடிப்பது போன்ற உணர்வு.

7. பெண்களில் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் அசாதாரணங்கள் அல்லது மாற்றங்கள் இதன் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

ஹார்மோன் சிகிச்சை

ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி

ஆன்டி-தைராய்டு மருந்துகள்

பீட்டா-பிளாக்கர்ஸ்

ரேடியோ ஆக்டிவ் அயோடின் தெரபி

அறுவை சிகிச்சை

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு