அமைச்சரின் சகோதரி வீட்டுக்குள் நுழைந்து ஒரு கோடி 13 லட்சம் பெறுமதியான நகைகள், வைரங்கள் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
அமைச்சரின் சகோதரி வீட்டுக்குள் நுழைந்து ஒரு கோடி 13 லட்சம் பெறுமதியான நகைகள், வைரங்கள் கொள்ளை!

அரசாங்கத்தின் சக்திமிக்க அமைச்சர் ஒருவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 3 நாட்களாக வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இருப்பினும் கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர், அங்கிருந்த நகைகள், வைரங்கள், இரத்தினக்கல் மோதிரங்களைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபா என தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் குறித்த வீட்டுக்குள் நுழைந்த இவற்றை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், திருடிய பொருட்களை பேலியகொட ஒலியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்துக் கைப்பற்றியதுடன் சந்தேகநபரைகைது செய்துள்ளனர். 

 சந்தேகநபரை நாளை (08) வெலிசர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு