பிரித்தானியாவில் அமுலாகும் புதிய விசா விதி

ஆசிரியர் - Editor II
பிரித்தானியாவில் அமுலாகும் புதிய விசா விதி

பிரித்தானியாவில் இவ்வருடம் ஜனவரியில், புதிய விசா விதிமுறை ஒன்று அமுலுக்கு வரும் நிலையில், சுற்றுலா விசாவில் பிரித்தானியா செல்லும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அதில் ஒரு நல்ல செய்தியும் அடங்கியுள்ளது.

சுற்றுலா விசாவில் பிரித்தானியா சென்றுள்ள வெளிநாட்டவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், பிரித்தானியாவில் பணி செய்ய அனுமதி வழங்கும் வகையில், இம்மாதம், அதாவது, ஜனவரி 31ஆம் திகதி, விசா விதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

சுற்றுலா விசா வைத்திருப்போர், வாடிக்கையாளர்களுடன் பணி செய்யவும், பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தங்கள் பணியைத் தொடரவும் அனுமதியளிக்கப்பட உள்ளது.  

இவ்வனுமதி வாடிக்கையாளர்களுடன் பணி செய்வோர், சில குறிப்பிட்ட அறிவியலாளர்கள், ஆராய்ச்சிகளில் ஈடுபடும் கல்வியாளர்கள், சட்டத்தரணிகள் முதலான சில குறிப்பிட்ட பிரிவினருக்கு, சில நிபந்தனைகளின் பேரிலேயே வழங்கப்பட உள்ளது.

உண்மையில், சுற்றுலா விசாவில் பிரித்தானியா சென்று பணி செய்யும் இந்த பிரிவினரால், பிரித்தானியாவுக்கு லாபம் ஏற்படவேண்டும் என்பதே இந்த விதியின் உண்மையான நோக்கம் ஆகும்.

பிரித்தானியாவில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை உத்வேகப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு