கேப்டனின் உடல்நிலை குறித்த விடயத்தில் உண்மையை மறைக்கும் பிரேமலதா!

ஆசிரியர் - Admin
கேப்டனின் உடல்நிலை குறித்த விடயத்தில் உண்மையை மறைக்கும் பிரேமலதா!

கடந்த ஒரு வார காலமாக கேப்டன் அவர்களின் உடல்நிலை குறித்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்தியிருக்கின்றது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேப்டன் அவர்கள் சுவாசிப்பதற்கு கஷ்டப்படுகிறார் 24 மணி நேரங்களுக்கு மேலாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை என்ற அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அவருடைய உடல் நலம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. இதனை பார்த்த கேப்டன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.     

இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோ ஒன்றில், ஏற்கனவே கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தன்னுடைய நினைவுகளை இழந்த நிலையில் இருந்த கேப்டன் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் மருத்துவமனையின் அறிக்கை ரசிகர்களை கலங்க செய்தது. இந்நிலையில், கேப்டனின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் கேப்டனின் உடல்நிலை குறித்து கவலை கொள்ள தேவையில்லை.

அவர் நலமுடன் இருக்கிறார் ஊடகங்களில் வெளியாக கூடிய செய்தி மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. தயவு செய்து இந்த செய்தியை மிகைப்படுத்தி வெளியிட வேண்டாம். கேப்டன் அவர்கள் விரைவில் பூரண நலம் அடைந்து வீட்டிற்கு வருவார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் கேப்டனின் சமீபத்திய புகைப்படம் என்று சில புகைப்படங்களை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏனென்றால், மருத்துவமனை தரப்பிலிருந்து நடிகர் விஜயகாந்த் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தொண்டையில் நுண்துளையிட்டு அதன் மூலம் சுவாசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என கூறினார்கள்.

அப்படி இருக்கும் ஒரு நோயாளியை கண்டிப்பாக மருத்துவமனை நிர்வாகம் படம் பிடித்து வெளியிட அனுமதிக்காது. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த் தேவையற்ற ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்பதாலும் அவருக்கு சிகிச்சை போய்க் கொண்டிருப்பதாலும் ரசிகர்கள் மற்றும் அவருடைய தொண்டர்களை ஆசுவாசப்படுத்துவதற்காகவே இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு உண்மை என்ன என்பதை மறைக்கிறார்.

மற்றபடி கேப்டன் அவர்களை சந்திக்க சென்ற நடிகர் சங்க நிர்வாகிகளை கூட கேப்டனை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்பதும் அவர்கள் மருத்துவர்களிடம் மட்டுமே கேப்டனின் உடல்நிலையை குறித்து பேசிவிட்டு வந்தார்கள் என்றும் தெரிகிறது.

இப்படி இருக்கையில் கேப்டன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வர வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு