SuperTopAds

வெள்ளத்தில் சிக்கிய அமீர் கானுக்கு நேரில் சென்று உதவிய அஜித்!

ஆசிரியர் - Admin
வெள்ளத்தில் சிக்கிய அமீர் கானுக்கு நேரில் சென்று உதவிய அஜித்!

நடிகர் அமீர் கான் அவரது அம்மாவின் டிரீட்மென்ட்டுக்காக சென்னையில் சில மாதங்கள் தங்கி இருக்கிறார். இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் அமீர் கானும் வெளியில் போக முடியாமல் சிக்கிக்கொண்டார்.     

அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை வீட்டில் இருந்து மீட்பு படையினர் படகு மூலமாக மீட்டனர்.

இந்நிலையில் அமீர் கான் சென்னையில் சிக்கிக்கொண்டிருப்பதை தெரிந்துகொண்ட நடிகர் அஜித், நேரில் சென்று உதவி செய்திருக்கிறார்.

அமீர் கானை விசாரித்த அஜித், எல்லோருக்கும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்து உதவி இருக்கிறார்.

அந்த போட்டோவை வெளியிட்டு நடிகர் விஷ்ணு விஷால் அஜித்துக்கு நன்றி கூறி இருக்கிறார்.