ஸ்ரீதேவியின் உடையை அணிந்து வந்த அவரது மகள்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்று இருந்த அவர் 2018ல் துபாயில் மர்மமான முறையில் இறந்தார்.
ஸ்ரீதேவியின் இரண்டு மகள்கள் - ஜான்வி மற்றும் குஷி கபூர் இருவரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக தான் இருக்கின்றனர். ஜான்வி ஏற்கனவே பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கும் நிலையில், குஷி கபூர் தற்போது தான் The Archies என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார்.
The Archies படத்தின் பிரீமியர் இன்று மாலை நடந்த நிலையில் அதில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்களும் வந்திருக்கிறார்கள்.
ஸ்ரீதேவியின் பழைய உடையை அணிந்து தான் குஷி கபூர் வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.