சட்டுபுட்டுனு எடையை குறைக்கும் எளிமையான வழி!

ஆசிரியர் - Editor II
சட்டுபுட்டுனு எடையை குறைக்கும் எளிமையான வழி!

பொதுவாக எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்றால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் அதிகப்படியான கவனம் தேவை.

துரித உணவுகள், ரோட்டுக்கடைகளில் கிடைக்கும் உணவுகள் இவற்றை அதிகமாக எடுத்து கொள்ளும் போது கொழுப்பின் சேர்க்கை அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக நாளடைவில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு எடை அதிகரித்து விடும்.

அந்த வகையில் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றால் பாசிப்பயறு சாப்பிடுவது சிறந்ததாகும். ஏனெனின் பாசிபயற்றில் புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

இதன்படி, பாசிப்பயற்றை வைத்து என்ன மாதிரியான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம் என்பதனை தெரிந்து கொள்வோம்.

1. பாசி பருப்பு தோசை

டயட்டில் இருப்பவர்கள் மற்றும் பெரியார்கள் காலையில் என்ன சரி ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். இப்படியானவர்கள் காலையில் பாசி பருப்பு தோசை செய்து சாப்பிடலாம்.

ரெசிபி

1. முதலில் பாசி பருப்பை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைக்கவும்.

2. பின்னர் தோசைக்கல்லில் தோசையை ஊற்றி அதில் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மொறுமொறுவென வந்தவுடன் இறக்கினால் சுவையான பாசி பயறு தோசை தயார்!

2. பாசி பருப்பு சூப்

காலையில் உட்கார்ந்து பொறுமையாக சாப்பிட முடியாதவர்கள் பாசி பருப்பில் சூப் செய்து சாப்பிடலாம்

ரெசிபி

1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பூண்டு, இஞ்சி, சீரகம், மசாலா, பெருங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

2. அதில் பாசி பயற்றை சேர்க்கவும்.

3. கொதித்தவுடன் தட்டி எடுத்த மிளகு சேர்த்து பரிமாறவும்.       

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு