வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சித்திரவதைக் கூடமே! – சட்டத்தரணி சுகாஷ்

ஆசிரியர் - Admin
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சித்திரவதைக் கூடமே! – சட்டத்தரணி சுகாஷ்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்  சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைவாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குறித்த இளைஞன் அலெக்ஸ் தடுத்துவைக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட  இடங்களை சாட்சியுடன் சென்று பார்வையிட்டார்.

அதன் பிறகு கருத்து தெரிவித்த அவர்,

பொலிஸ் குறித்த இடங்களை அவதானித்தவற்றின் அடிப்படையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சட்ட அடிப்படையிலான காவல் நிலையமாக இல்லாது, சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என உணரமுடிகின்றது.

நீதிமன்ற விசாரணைகள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக ஏனைய பல விடயங்களை வெளிப்படுத்துவதை இவ்விடத்தில் தவிர்த்துக் கொள்கின்றேன். – என தெரிவித்துள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு