மன்னிப்பு கேட்ட மன்சூர் அலி கான்: த்ரிஷா அனுப்பிய பதில்!
நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் த்ரிஷா பற்றி அருவருப்பான வகையில் பேசி இருந்தது சர்ச்சை ஆனது. லியோ படத்தில் த்ரிஷா உடன் நடிக்கிறோம் என்றதும் பெட் ரூம் சீன் இருக்கும் என நினைத்தே என தொடங்கி மிகவும் மோசமான வகையில் மன்சூர் அலி கான் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
த்ரிஷா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாக வந்தனர். லியோ இயக்குனர் லோகேஷ் உட்பட பலரும் மன்சூர் அலி கானை திட்டினார்கள்.
வழக்கு பதிவான நிலையில் நேற்று போலீஸ் முன்னிலையில் இது தொடர்பாக ஆஜரானார் மன்சூர்.
மன்னிப்பு..
'நானெல்லாம் மன்னிப்பு கேட்கிற ஜாதியில்லை' என மன்சூர் ஆரம்பத்தில் பேசி வந்த நிலையில், சர்ச்சை பெரிதானதும் இன்று த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
அதற்கு த்ரிஷா தற்போது பதில் அளித்து இருக்கிறார். "தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு" என த்ரிஷா கூறி இருக்கிறார்.