SuperTopAds

ஷங்கருக்கு நெருக்கடி தரும் ராம் சரண்!

ஆசிரியர் - Admin
ஷங்கருக்கு நெருக்கடி தரும் ராம் சரண்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

 தீபாவளி முன்னிட்டு இந்த படத்தின் முதல் சிங்கிளான ஜரகண்டி ஜரகண்டி பாடலை வெளியிடுவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அதையும் ரத்து செய்துவிட்டார்கள்.     

படமும் இரண்டுக்கு மேல் இழுத்து கொண்டு போவதால் ராம் சரண் ஷங்கர் மீது கடுப்பில் இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. மேலும் படத்தை விரைவில் முடிக்க சொல்லி இயக்குனர் ஷங்கருக்கு ராம் சரண் நெருக்கடி கொடுத்தாக சொல்லப்படுகிறது.

ராம் சரணின் 16 வது படத்தை இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கவுள்ளார். இப்படத்திற்காக தான் ராம்சரண் கேம் சேஞ்சர் திரைப்படத்தை சீக்கிரம் முடித்து தரவேண்டும் என்று தயாரிப்பாளரிடமும் கேட்டுள்ளாராம்.