மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காதது ஏன்?
வடக்கில் பெய்துவரும் அதிக மழை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதிவரை இந்நிலை தொடருமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து வடமாகாண ஆளுநரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் சிரமப்படுவதுடன் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக கூறியுள்ளார்.