மாகாண சபையின் அதிகாரத்தை பறிக்கும் வரவுசெலவுத் திட்டம்!

ஆசிரியர் - Admin
மாகாண சபையின் அதிகாரத்தை பறிக்கும் வரவுசெலவுத் திட்டம்!

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மாகாண சபையின் அதிகாரம் மத்திய அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.     

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாகாண சபை செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அதிகாரப் பகிர்வைக் கேட்டோம்.இது தொடர்பில் ரணில் எம்மிடம் பேசி நம்பிக்கை பெற்றிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீதத்தை எவராலும் பெற்றுக்கொண்டு அதிகாரத்தை நிறுவ முடியாது.எங்களுடைய பலத்தை காட்டுவோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி நம்பிக்கையை பெற்றிருந்த நிலையில் தற்போது நம்பிக்கை குறைந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சிக்கு கோத்தபாய பசில் மகிந்த தான் காரணம். நீதிமன்ற தீர்ப்பு சரி.போருக்கு பின் பணம் சம்பாதித்தார்கள் அதனால் தான் நாடு சரிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு