மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

ஆசிரியர் - Admin
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே தற்போது தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை  இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை, ஆனால் தான் பொறுத்திருந்து பார்ப்போம்.

இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே எனது முதன்மையான கவனம். அதன் பிறகு நான் முடிவு செய்வேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அறிவிக்கும் கூட்டம் நேற்று (14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களும் கடினமாக இருக்கும். இது படிப்படியாக மேம்படும். இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மறையானதாக இருக்கலாம்.

2018 மொத்த உள்நாட்டு தயாரிப்பு 94.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். 2022 மொத்த உள்நாட்டு தயாரிப்பு 77 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்தது. 2023 மொத்த உள்நாட்டு தயாரிப்பு 85 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

நாங்கள் இன்னும் 2018 ஆம் ஆண்டுக்கான நிலையில் இல்லை. அடுத்த வருடமும் அந்த நிலை வராது. எங்கள் பயணம் 2025 முதல் தொடங்கும். அதற்கான ஏற்பாடுதான் இது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு