சில சக்திகளின் கையாள்களாக செயற்படுபவர்கள் தமது நலன்களுக்காக கடற்றொழில் அமைச்சர் மீது அவதூறு பரப்புகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு!

ஆசிரியர் - Admin
சில சக்திகளின் கையாள்களாக செயற்படுபவர்கள் தமது நலன்களுக்காக கடற்றொழில் அமைச்சர் மீது அவதூறு பரப்புகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு!

கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவறான கருத்துக்கள் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி சில கடற்றொழில் அமைப்பு என கூறுபவர்கள் அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுக்க முன்கின்றனர்.

உண்மையில் கடற்றொழில் மற்றும் நீரியல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு படகுகள் அனுமதிப்பத்திரம் இன்றி வேறு நாடுகளின் எல்லைக்குள் பிரவேசித்தால் அல்லது சட்டவிரோதமானதும் தடைசெய்யப்பட்டதும் அறிக்கையிடப்படாதுதுமான கடற்றொழிலில் ஈடுபட்டால்  அப்படகின் அனுமதிப்பத்திரதாரி மாத்திரமே முன்பு குற்றவாழியாக கருதப்பட்ட நிலையில் தற்போது மேற்படி சட்டத்தின் மூலம்  அனுமதிப்பத்திரதாரி என்ற வகையில் அப்படகின் உரிமையாளர், ஓட்டி மற்றும் அப்படகில் பயணிக்கும் நபர்கள் அனைவரும் குற்றவாளியாக கணிக்கப்பெறுவார்கள்.

இதனால் மேற்படி சட்டவிரோத செயற்பாடுகளை கூடுமானவரையில் கட்டுப்படுத்துவதே நோக்கமாகும். அனுமதிப்பத்திரதாரி மாத்திரம் குற்றவாளியாக்கப்படுவதால்  ஓட்டி உட்பட ஏனைய தொழிலாளர்கள் வேறு கடற்றொழில் படகுகளில் சென்று மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுவதால் அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கும் சந்தார்பபம் உருவாகுவதுடன் படகுகளின் நீளத்தக்கேற்ப அதனது  கொள்டளளவின் அடிப்படையில் தண்டமும் அறவிட முடியும்.

இதனூடாக அதிகரித்துவரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கூடுமானவரை கட்டுப்படுத்த முடியும்;.

இந்த ஆலோசனைகள் கடற்றொழில் அமைப்புகளின் கருத்துக்களை பெற்று பின்னர் சட்ட திருத்த ஆராய்வுக்கு பின்னரே நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்து விவாதாத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்கள் இருப்பின் அவை சீர்செய்யப்பட்டு அது நடைமுறைக்கு சட்டமாக நிறைவேற்றப்படும்.

இச்சட்டம் 1996 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்கத்தை கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வழங்கல் சட்டத்தினை திருத்துகின்ற கட்டளை சட்ட வரைபே அன்றி புதிய சட்டம் அல்ல.

இது இவ்வாறிருக்க அறியாமையில் பேசுகின்ற சில அமைப்புகள் புதிய சட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் தவறாக கருத்துக்களை பரப்பிவருகின்றனர் எனவும் சில சக்திகளின் கையாள்களாக செயற்படுபவர்கள் தமது நலன்களுக்காக இவ்வாறான தவறான அவதூறுகளை மேற்கொண்டுவருகின்றனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு