அதிரடி காட்டிய இந்தியா துடுப்பாட்ட வீரர்கள்!! -சாதனையுடன் நியூஸிலாந்துக்கு 398 வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா-

ஆசிரியர் - Editor II
அதிரடி காட்டிய இந்தியா துடுப்பாட்ட வீரர்கள்!! -சாதனையுடன் நியூஸிலாந்துக்கு 398 வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா-

முடிவுக் கட்டத்தை எட்டியுள்ள ஐ.சி.சி உலகக் கிண்ண 2023 கிரிக்கெட் தொடரில் தற்போது மும்பையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்ச்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்ததை தொடர்ந்து களமிறங்கிய ரோகித் அதிரடியாக விளையாடி 71 ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தார். குறிப்பாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 ஓட்டங்களை ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அவருக்கு அடுத்ததாக வந்த கோலி தம்முடைய பாணியின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய கில் வேகமாக ஓட்டங்களை குவித்ததால் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ஓட்டங்களுடன் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தால் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் விராட் 9 பவுண்டரிகள், 1 சிக்சருடன் சதமடித்து 117 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழருந்தார். 

ஆனால் அவருக்கு பின் வந்து அவரை விட அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி 8 சிக்சருடன் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 105 ஓட்டங்களை குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கே.எல் ராகுல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அதனால் 50 பந்துப் பரிமாற்றங்களில் இந்தியா 397/4 ஓட்டங்களை எடுத்து அசத்திய நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 இலக்குகளையும் சாய்த்தார். 

இதன் வாயிலாக உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச ஓட்டப்பெறுதியை பதிவு செய்த அணி என்ற நியூசிலாந்தின் சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு