கார் மீது துப்பாக்கிச்சூடு!! -பிரான்சில் பெண் உட்பட இருவர் பலி-

ஆசிரியர் - Editor II
கார் மீது துப்பாக்கிச்சூடு!! -பிரான்சில் பெண் உட்பட இருவர் பலி-

பிரான்சின் நகரம் ஒன்றில், கார் ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

பிரான்சிலுள்ள துறைமுக நகரமான மார்சேய் (Marseille) நகரில், மெக்டொனால்ட் உணவகம் ஒன்றின் கார் தரிப்பிடத்தில், கார் ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது.

அக் காரில் முன் இருக்கையில் ஒரு ஆணும், பெண்ணும், பின் இருக்கையில், இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் என 5 பேர் இருந்துள்ளனர்.

அப்போது, மற்றொரு கார் அந்தக் காரின் அருகே வந்து நின்றுள்ளது. அந்தக் காரிலிருந்தவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், நின்று கொண்டிருந்த காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயதுகளிலிருக்கும் ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பின் இருக்கையில் இருந்தவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்ததில், இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

காரில் இருந்த ஆண்கள் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் வன்முறை தொடர்பில் பொலிசாருக்குத் தெரிந்தவர்களென்றும், அந்தப் பெண்கள் எந்தக் குற்றப்பின்னணியும் இல்லாதவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு