ஹமாஸ் பணயக்கைதிகள் தொடர்பில் தகவல் வழங்கினால் பணமும் பாதுகாப்பும்!! -இஸ்ரேல் அறிவிப்பு-
ஹமாஸ் பணயக்கைதிகள் குறித்து தகவல் வழங்குமாறு காஸாவில் இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறது.
ஹமாஸ் பணயக்கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்கினால் அவர்களுக்கு நிதி உதவியும் பாதுகாப்பும் வழங்கப்படும் என காஸா வாசிகளுக்கு இஸ்ரேல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலம் வேண்டுமெனில், இப்போதே செயல்படுங்கள். உங்கள் பகுதியில் பணயக் கைதிகள் யாரேனும் இருப்பது தெரிந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று இஸ்ரேல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிவிப்பில், தகவல்களுக்கு தொடர்பு எண்களை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது. அதேபோன்று, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஹமாஸை எச்சரித்துள்ளார்.
அதே சமயம், காஸாவில் தொடர்ந்து தீவிரமான வான்வழித் தாக்குதல்களைக் குறைக்கும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேலின் கூட்டுப் படைகளின் தலைவர் ஹெர்சி ஹலேவி பதிலளித்தார். ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தென் பிராந்தியத்திலும் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம் என்று ஹலேவி கூறினார்.