SuperTopAds

பேருந்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 3 பேர் கைது!!

ஆசிரியர் - Editor I
பேருந்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 3 பேர் கைது!!

குருநாகல் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை பஸ் உரிமையாளர்கள் தமது பணியாளர்கள் தொடர்பில் நன்கு அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நன்னடத்தைக் கொண்ட அதேவேளை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தரப்பினரை சேவையில் அமர்த்த வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 13 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. கும்புக்கெடே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக குறித்த மாணவி பஸ்ஸில் பயணித்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளதுடன் சாரதி நடத்துனர் மற்றும் 23 வயதுடைய இளைஞர் ஒருவருமே இருந்துள்ளனர். இதன்போதே குறித்த இளைஞர்  மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த இளைஞனின் குற்றத்திற்கு பஸ் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகநபரின் செயலுக்கு துணை சென்றுள்ளனர். நடத்துனர் குறித்த சந்தர்ப்பத்தில் பஸ்ஸின் ஜன்னல் கதவுகளை மூடி விட்டு அதன் திரைகளை  மறைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் மாணவி இறங்க வேண்டிய இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரையில் அழைத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் மாணவியை அதே இடத்தில் விட்டு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி இந்த விடயம் தொடர்பில் பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என்பதுடன்,  பாடசாலைக்கு சென்ற மாணவி சம்பவம் தொடர்பில் ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னரே குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான சந்தேகநபர், 34 வயதுடைய சாரதி, 23 வயதுடைய நடத்துனர் ஆகியோர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் மருத்துவ அறிக்கைகள் இதுவரையில் கிடைக்கபெறவில்லை. மாணவியின் வாக்குமூலங்களுக்கு அமைய அவர் கடுமையான பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கும்புக்கெடே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள்

குருநாகல் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை பஸ் உரிமையாளர்கள் தமது பணியாளர்கள் தொடர்பில் நன்கு அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நன்னடத்தைக் கொண்ட அதேவேளை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தரப்பினரை சேவையில் அமர்த்த வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 13 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. கும்புக்கெடே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக குறித்த மாணவி பஸ்ஸில் பயணித்துள்ளார்.குறித்த சந்தர்ப்பத்தில் அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளதுடன் சாரதி நடத்துனர் மற்றும் 23 வயதுடைய இளைஞர் ஒருவருமே இருந்துள்ளனர். இதன்போதே குறித்த இளைஞர்  மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த இளைஞனின் குற்றத்திற்கு பஸ் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகநபரின் செயலுக்கு துணை சென்றுள்ளனர். நடத்துனர் குறித்த சந்தர்ப்பத்தில் பஸ்ஸின் ஜன்னல் கதவுகளை மூடி விட்டு அதன் திரைகளை  மறைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் மாணவி இறங்க வேண்டிய இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரையில் அழைத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் மாணவியை அதே இடத்தில் விட்டு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி இந்த விடயம் தொடர்பில் பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என்பதுடன்,  பாடசாலைக்கு சென்ற மாணவி சம்பவம் தொடர்பில் ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னரே குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான சந்தேகநபர், 34 வயதுடைய சாரதி, 23 வயதுடைய நடத்துனர் ஆகியோர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் மருத்துவ அறிக்கைகள் இதுவரையில் கிடைக்கபெறவில்லை. மாணவியின் வாக்குமூலங்களுக்கு அமைய அவர் கடுமையான பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கும்புக்கெடே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்ப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும். பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பஸ்களில் குறித்த பகுதிக்குரிய பொலிஸ் நிலையங்களில் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும். அவர்களின் நன்னடத்தை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெறாமல் தவிர்ப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பஸ்களில் குறித்த பகுதிக்குரிய பொலிஸ் நிலையங்களில் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும். அவர்களின் நன்னடத்தை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.