கே.ஜி.எப் வசூல் சாதனையை அடித்து நொறுக்கிய விஜயின் லியோ

ஆசிரியர் - Editor II
கே.ஜி.எப் வசூல் சாதனையை அடித்து நொறுக்கிய விஜயின் லியோ

தளபதி விஜய்யின் லியோ படம் வெளிவருவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. 

இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் லியோ வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் தளபதி விஜய் படத்திற்கு மாபெரும் வசூல் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

தமிழ்நாட்டையும் தாண்டி தளபதி விஜய்யை பெரிதளவில் கொண்டாடும் இடம் என்றால் அது கேரளா தான். ஆனால் தற்போது கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்றால், அது யாஷ் நடித்த கே.ஜி.எப் 2 படம் தான்.

ஆம், கே.ஜி.எப் 2 முதல்நாளில் 7.25 கோடி ரூபா வரை வசூல் செய்து கேரளாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையாக இதுவரை இருந்தது. இந்த சாதனையை தற்போது தளபதியின் லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முறியடித்துள்ளது.

லியோ படத்திற்கான ப்ரீ புக்கிங் கேரளாவில் மட்டுமே 7.4 கோடிக்கும் மேல் வசூல் சென்றுவிட்டது. இதன்மூலம் கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற மாபெரும் சாதனையை லியோ படைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு