விஜய்க்கு ஜோடியாக லியோவில் நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஆசிரியர் - Editor II
விஜய்க்கு ஜோடியாக லியோவில் நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக உள்ள நடிகை திரிஷா தளபதி விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

இதில் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை மறுதினம் உலகளவில் பிரமாண்டாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் திரிஷாவிற்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் இருக்கிறது என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். 

இந்நிலையில், கிட்டதட்ட 300 கோடி ரூபா செலவில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடிக்க நடிகை திரிஷா 5 கோடி ரூபா சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

மேலும் அடுத்ததாக மணி ரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் கமல் 234 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க 12 கோடி ரூபா வரை திரிஷா சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு