ரஜினி, அஜித் படங்களை ஊதித் தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ

ஆசிரியர் - Editor II
ரஜினி, அஜித் படங்களை ஊதித் தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ

தளபதி விஜயின் லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்வரும் 19 திகதி  உலகளவில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் ரிலீஸுக்கு 40 நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதை நாம் அறிவோம். இதில் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வந்தது.

இந்நிலையில் லியோ, திரைப்படம் இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாய்க்கும் மேல் ப்ரீ புக்கிங் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரஜினி, அஜித் என அனைத்து தமிழ் நட்சத்திரங்கள் படங்களின் ப்ரீ புக்கிங் வசூல் சாதனையை அசால்டாக பின்னுக்கு தள்ளிவிட்டது.

இதன்மூலம் தமிழ் சினிமாவில் ப்ரீ புக்கிங்கிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ இடம்பிடித்துள்ளது. ப்ரீ புக்கிங்கில் 60 கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ள நிலையில் கண்டிப்பாக முதல் நாள் 100 கோடிக்கும் மேல் வசூல் வர அதிக வாய்ப்புள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு