சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது! சிறுமியின் நிர்வாண படங்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது! சிறுமியின் நிர்வாண படங்களும் மீட்பு..

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் - பெரிய காமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவரே மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப்புகைப்படங்களை வைத்து சிறுமியை மிரட்டி வன்புணர்விற்கு உள்ளாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை வன்புணர்விற்கு உள்ளாக்கியதுடன் அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தையும் வலுக்கட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு