ரஜினியின் தலைவர் 171 பட கதையை விஜய்க்கு கூறிய லோகேஷ்!! தளபதி என்ன சொன்னார் தெரியுமா?

ஆசிரியர் - Editor II
ரஜினியின் தலைவர் 171 பட கதையை விஜய்க்கு கூறிய லோகேஷ்!! தளபதி என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள, லியோ படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 171.

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பும் அண்மையில் தான் வெளிவந்தது. மாஸ்டர், விக்ரம், லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், தலைவர் 171 படத்தின் கதையை தளபதி விஜய்யிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

அதற்கு விஜய் '10 நிமிடத்தில் எனக்கு இப்படியொரு கதையை பிடித்துபோனதே இல்லை, சூப்பர்' என லோகேஷ் இடம் கூறியிருக்கிறார் தளபஎ விஜய். 

இதை அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு