பொலிஸாரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிய அம்புலன்ஸ் சாரதி தமிழகத்தில் கைது!

ஆசிரியர் - Editor I
பொலிஸாரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிய அம்புலன்ஸ் சாரதி தமிழகத்தில் கைது!

போதைப் பொருளுடன் வைத்தியசாலை ஊழியர் இருவரை பொலிஸார் கைதுசெய்தபோது பொலிசாரின் கையை கடித்து விட்டு தப்பியோடிய அம்புலன்ஸ் சாரதி தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாக்குநீரினை வழியாக சட்டபூர்வமற்ற முறையில் தமிழ்நாட்டுக்கு சென்றவேளையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ந் திகதி இரவு வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து 179 கிராம் ஐஸ் போதைப் பொருளை கைமாற்ற முற்பட்டவேளையில் குற்றத்தடுப்பு பொலிசார் அவர்களை கைதுசெய்ய முற்பட்டனர்.

அப்போது ஒருவர் கைது செய்யப்பட்டபோதும் மற்றையவர் பொலிசாரின் கையை கடித்துவிட்டு தப்பியோடியிருந்தார்.

தப்பியோடியவரைத் தேடி பொலிசார் வலை வீசி இருந்த வேளையில் குறித்த நபர் தலைமன்னார் பாக்குநீர் கடல் ஊடாக இந்திய இழுவைப் படகு மூலமாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை (06) இரவு இந்திய இழுவைப் படகு மூலம் சென்று இவர் சனிக்கிழமை (07) காலை ராமநாதபுரம் பகுதியில் கரையிறங்கியதும் இவரில் சந்தேகம் கொண்டவர்கள் ராமநாதன் பொலிசாருக்கு கொடுத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மண்டபம் மரைன் பொலிசார்  இவரை கைது செய்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்தி தெரிவிக்கின்றது.

இதைத் தொடர்ந்து இச்சந்தேக நபரை மண்டபம் மரைன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு