சிறுபான்மையின நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு காரணம் இது தான்!

ஆசிரியர் - Admin
சிறுபான்மையின நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு காரணம் இது தான்!

தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மையினர் அடக்குகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ஒய்வுபெற்ற நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்டதற்கு நீதிவழங்ககோரி இன்று யாழ் மருதனார்மடத்தில் இருந்து யாழ்ப்பாண நகர் வரை இடம்பெற்ற சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

நீதிபதிகளின் தீர்ப்புக்கள் பிழையாக இருக்கும் பட்சத்தில் அதனை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம். அதனை விடுத்து தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தல் செய்வது அது நீதித்துறைக்கும் ஆகாது. நாட்டின் வருங்காலத்தினை பாதிக்கும்.

சிறுபான்மையினரின் நீதிபதியினை இவ்வாறு அச்சுறுத்துவது சிறுபான்மையினம் சம்பந்தமான உண்மையான சரியான தீர்ப்புக்களை கொடுக்க முடியாமல் போய்விடும். தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்கமுடியாமல் போய்விடும்.

இவ்வாறு அச்சுறுத்துவது பெரும்பான்மையினரின் அடக்குமுறையினை காட்டுகின்றது. அரசாங்கம் இதனை உரியவகையில் நிறுத்தவேண்டும் என்பதுடன் இதற்கு சரியான முறையில் தீர்ப்புக்களை வழங்கவேண்டும் என்றார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு