முற்பதிவில் வசூல் வேட்டையாடும் தளபதியின் லியோ -இதுவரை இத்தனை கோடி தெரியுமா-

ஆசிரியர் - Editor II
முற்பதிவில் வசூல் வேட்டையாடும் தளபதியின் லியோ -இதுவரை இத்தனை கோடி தெரியுமா-

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமான லியோ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நிறுத்தப்பட்டதால் தளபதி ரசிகர்கள் சற்று வேதனையில் உள்ளார்கள். ஆனால், இரண்டாவது பாடல் வெளிவந்து அதை சரி செய்துள்ளது. விரைவில் டிரைலர் எப்போது வெளியாகும் என்று தான் காத்துகொண்டு உள்ளார்கள். 

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் ரிலீஸுக்கு 40 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. இப்படம் வெளிவர இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

USA-வில் 4 கோடி, UK-ல்  4 கோடி, கேரளாவில் 2 கோடியும், மற்ற இடங்களில் 2 கோடியும் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது லியோ படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் அட்வான்ஸ் புக்கிங் என பார்க்கப்படுகிறது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு