எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று அவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரி மத்யூ ஹின்சனும்(Matthew Hinson) கலந்து கொண்டிருந்தார்.
இலங்கையில் தற்போது நிகழ்ந்து வரும் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடல்களை நிகழ்த்தியிருந்தனர்.
தற்போதிருக்கும் அரசின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு இதன்போது தெரிவித்திருந்தார்.
மேலும், தேர்தலை ஒத்திவைத்திருத்தல், பொருட்களின் விலை அதிகரிப்பு, மற்றும் பொருளாதார நெருக்கடி என பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டிருந்தது.