ஆபத்தான தமிழரின் நடமாட்டம்!! -லண்டன் பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
ஆபத்தான தமிழரின் நடமாட்டம்!! -லண்டன் பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை-

கிழக்கு லண்டலில் இயங்கிவரும் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படும் தமிழர் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநகர பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு தப்பியவரை தேடி வருவதாகவும், அவர் தலைமறைவாக உள்ளதால் தற்போது அவரை கைது செய்ய முடியவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பாலசங்கர் நாராயணன் என்ற அந்த நபர் செப்டம்பர் 21 ஆம் திகதி மாயமானதாக கூறியுள்ள பொலிசார், ஆபத்தானவர், பொதுமக்கள் எவரும் அவரை நெருங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

43 வயதான பாலசங்கர் நாராயணன் கடைசியாக வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் சட்டையுடன் கருப்பு டிராக்சூட் கால்சட்டையும் கருப்பு பேஸ்பால் தொப்பியும் அணிந்து காணப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் நியூஹாம், கிரீன்போர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்போர்ட் பகுதியிலும் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் பாலசங்கர் நாராயணன் காணப்பட வாய்ப்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலசங்கர் நாராயணன் காப்பகத்தில் இருந்து தப்புவது இது முதல் முறையல்ல என்றே கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்திலும், பொலிசார் இவர் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் 2021 இல் இவர் ஒருமுறை தொடர்புடைய காப்பகத்தில் இருந்து மாயமாகியுள்ளார் என்றே கூறப்படுகிறது. லண்டன் ரயில்களில் இவர் பயணிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கும் பொலிசார், பொது மக்களுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக தகவல் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு