நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து!! -அடுத்த மாதம் ஆரம்பிக்க வாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து!! -அடுத்த மாதம் ஆரம்பிக்க வாய்ப்பு-

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு ஒக்டோபரில் பயணியர் கப்பல் போக்குவரத்தை ஆராம்பிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவை இணைந்து, நாகை சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல்மைல் தொலைவில் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணியர் கப்பலை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், நாகை துறைமுக கால்வாயை தூர் வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.

நாகை துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்குள்  நிறைவு பெற்று, ஒக்டோபரிலேயே கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு