தியாகி திலீபனின் ஊர்தி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்திய 5 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் ஊர்தி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்திய 5 பேர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் மீதும் தாக்குதல் நடாத்திய கும்பலில் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சர்தாபுர பகுதியில் நேற்றைய தினம் மாலை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதும் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தி மீதும் இலங்கை தேசிய கொடியுடன் வந்த சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் சீனன் குடா பொலிஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் முறைப்பாடு செய்ததை அடுத்து முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு