இன்றைய ராசிபலன் - 16/09/2023, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

ஆசிரியர் - Editor I
இன்றைய ராசிபலன் - 16/09/2023, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

இன்றைய  பஞ்சாங்கம்

16-09-2023, ஆவணி 30, சனிக்கிழமை, பிரதமை திதி காலை 09.18 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் காலை 07.36 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். சந்திர தரிசனம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 16.09.2023

மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை இருக்கும். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.   வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.

தனுசு

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று உங்களுக்கு உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். 

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு