கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இதுவரை 17 பேரின் எச்சங்கள் மீட்பு!

ஆசிரியர் - Admin
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இதுவரை 17 பேரின் எச்சங்கள் மீட்பு!

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித புதைகுழி அகழ்வுப்பணி அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.     

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் கிட்டத்தட்ட 17 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகமான உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கும் என்ற சந்தேகங்களும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்றும் மேலும் மேலதிக வேலைகளை செய்வதற்கு காலம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்

இந்த மனித புதைகுழிகளை பதிவு செய்வதும் ஆவணப்படுத்தப்படுவதும் மிகவும் முக்கியமான விடயம். குற்ற வழக்குகளிலே இவைகள் தான் சாட்சியம் இந்த சாட்சியங்களை பெற்று நீதிமன்றத்தின் முன்னிலையில் வைக்கின்ற வரையில் ஆவணங்களில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு மிகப்பெரியளவில் உதவுகின்ற விடயம் ஆகும்.

ஆகவே, அனைத்து விடயங்களும் எந்த வித ஒளிவு மறைவு இல்லாமல் இந்த ஆவணப்படுத்தல் மிக முக்கியமானது என அனைவரும் எதிர்பார்க்கின்றோம். துரதிஸ்டவசமாக இன்று பார்த்தால் ஊடகங்களுக்கும் மனித புதைகுழி நடவடிக்கைகளின் போது அதை ஆவணப்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. வேலை தொடங்குவதற்கு முதலும் வேலை முடிகின்ற பொழுதும் அவர்கள் புகைப்படங்களை எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சாட்சியங்கள் சேகரிக்கும் முறைகள் சரியாக நடைபெறுகின்றதா இல்லையா என்பதை உலக மக்கள் அறிய அவற்றை ஆவணப்படுத்த ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த மனித புதைகுழிகள் கண்டறிந்த காலகட்டத்திலே கணிசமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே ஊடகங்கள் செய்திகளை வெளிக்கொண்டு வந்தமையால் மேலோட்டமாக காட்டுகின்ற வகையில் எமக்கு தெரியக்கூடியதாக உள்ளது அதுவும் மட்டுப்படுத்தும் வகையில் காட்டப்படுகின்றமை பலத்த ஏமாற்றத்தை கொடுக்கின்றதாக காணப்படுகின்றது

மேலும், இந்த அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டவுடன் பாதிக்கப்பட்ட தரப்புகள் ஏற்றுக்கொள்ளதக்கதாக ஆய்வுப்பணிகள் இடம்பெற வேண்டும்.

ஒரு சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரலாம் என்கின்ற சூழ்நிலையிலே இன்றைய தினம் இவற்றை பார்வையிடும் போது அதிகாரிகள் 17 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மேலும் உடல்கள் இருக்கலாம் என்று சந்தேகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு