இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முருகன் தேவஸ்தான ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடு
இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முருகன் தேவஸ்தான ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடு
இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முருகன் தேவஸ்தான ஆலயத்தில் உயிர் நீத்த பொலிஸார் மற்றும் மக்களையும் தற்போது நாட்டை பாதுகாக்கும் பொலிஸாருக்கு ஆசி வேண்டி பிரார்த்தனை வழிபாடு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிகாட்டுதலின் கீழ் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இப்பிரார்த்தனை நிகழ்வினை கல்முனை முருகன் தேவஸ்தான ஆலய பிரதம குருக்கள் கந்தசாமி சச்சிதானந்த சிவ குருக்கள் மேற்கொண்டு பொலிஸாருக்கு ஆசி வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் ,கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன் ,பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் இலங்கை மக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இயங்கி வருகின்றது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது 3 அரச நிறுவனங்களில் முக்கிய அரச நிறுவனமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் காணப்படுகின்றது. 1796 ம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப்பகுதியை கைப்பற்றியதன் பின்னர் முதல் தடவையாக இலங்கையில் பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் 1866 ம் ஆண்டு செப்டம்பர் 3 ம் திபதி ஜோர்ஜ் வில்லியம் ரொபின்சன் கெம்பல் முதல் பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து இலங்கை பொலிஸ் சேவை ஆரம்ப்பிக்கப்பட்டது.பின்னர் பொலிஸ் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபரா சேர் ரிச்சர்ட் அழுவிகாரே 1948 ம் ஆண்டு ஜனவரி 6 ம் திகதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சேவை உண்மையான இலங்கையர்களின் சேவையாக மாறியது.
பொலிஸ் சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சமூக பிறழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக மக்களுக்காக பொலிசார் பாரிய பணியாற்றி வருகின்றனர்.